சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மங்களூரு எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டது


சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மங்களூரு எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 27 Oct 2018 11:31 AM GMT (Updated: 27 Oct 2018 11:31 AM GMT)

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் மங்களூரு எக்ஸ்பிரெஸ் ரெயில் தடம் புரண்டது.

சென்னை,

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தின் யார்டில் இருந்து நடைமேடை நோக்கி மங்களூரு எக்ஸ்பிரெஸ் ரெயில் இன்று மதியம் புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில், அந்த ரெயிலின் கடைசியில் இருந்த காலி பெட்டி ஒன்று தடம் புரண்டது.  இதனால் மற்ற ரெயில்களின் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இதுபற்றிய தகவல் அறிந்து ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்றனர்.  தடம் புரண்ட காலி ரெயில் பெட்டியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Next Story