சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.84க்கு விற்பனை


சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.81.84க்கு விற்பனை
x
தினத்தந்தி 4 Nov 2018 1:39 AM GMT (Updated: 4 Nov 2018 1:39 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது.

சென்னை,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.

இந்த நிலையில் கடந்த 18ந்தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய தொடங்கியது.  இதனை அடுத்து தொடர்ந்து கடந்த 2 வாரங்களாக இவற்றின் விலை குறைந்துள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்து உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 22 காசுகள் குறைந்து ரூ.81.84க்கு விற்பனையாகிறது.  இதேபோன்று டீசல் விலை 18 காசுகள் குறைந்து ரூ.77.55க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Next Story