மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழப்பு


மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழப்பு
x
தினத்தந்தி 4 Nov 2018 3:23 AM GMT (Updated: 4 Nov 2018 3:23 AM GMT)

மதுரை அரசு மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட ஒரு வயது குழந்தை உயிரிழந்தது.

விருதுநகர்,

விருதுநகரில் உள்ள திருச்சுழியை சேர்ந்த சக்திவேல் (வயது 1) என்ற குழந்தைக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது.  இதனை அடுத்து சக்திவேலின் பெற்றோர் குழந்தையை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தை பன்றிக்காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தது.  பன்றிக்காய்ச்சலுக்கு 5 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் மற்றும் காய்ச்சலுக்கு 98 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story