பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து


பிரதமருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி தீபாவளி வாழ்த்து
x
தினத்தந்தி 6 Nov 2018 6:25 AM GMT (Updated: 6 Nov 2018 6:25 AM GMT)

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

தீபாவளி திருநாள் நாடு முழுவதும் உற்சாகமுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.  இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களுக்கு தங்களது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோருக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

அவர், தங்களது வாழ்வில் அமைதி, வளம், நல்ல உடல்நலம் ஆகியவற்றை தீப ஒளி திருநாள் கொண்டு வரட்டும் என்ற செய்தியடங்கிய தீபாவளி வாழ்த்து கடிதத்தினை மலர் கொத்துடன் அனுப்பியுள்ளார்.

இதேபோன்று, தனக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய ஆளுநர் பன்வாரிலாலுக்கு நன்றி தெரிவித்து தனது தீபாவளி வாழ்த்துகளை அவர் தெரிவித்துள்ளார்.

Next Story