கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியீடு


கஜா புயல் பாதிப்பிற்காக ரூ.1000 கோடி நிவாரணம் ஒதுக்கியதற்கான அரசாணை வெளியீடு
x
தினத்தந்தி 21 Nov 2018 6:33 AM GMT (Updated: 21 Nov 2018 6:33 AM GMT)

கஜா புயல் நிவாரணப் பணிகளுக்கு ரூ.1000 கோடி விடுவித்தது தொடர்பாக அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.

சென்னை,

கஜா புயல் பாதிப்பு  சீரமைப்பு பணிகளுக்கான ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு  விவரம்  அரசாணையாக  வெளியிடப்பட்டு உள்ளது.

 * புயலால் சேதம் அடைந்த  வீடுகளுக்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு

 * விவசாய துறைக்கு ரூ.350 கோடி

*  மின் வினியோக சீரமைப்பு பணிகளுக்கு முதல் கட்டமாக ரூ 200 கோடி ஒதுக்கீடு

* மீன் வளத்துறைக்கு  ரூ. 41.63 கோடி ஒதுக்கீடு

* கால்நடைகள் உயிரிழப்புக்கு ரூ.205.87 கோடி  ஒதுக்கீடு 

* குடி நீர்,சாலை உள்கட்டமைப்பு  பணிகளுக்கு ரூ. 102.5 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டு உள்ளது.

Next Story