சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.32 ஆக விற்பனை


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.32 ஆக விற்பனை
x
தினத்தந்தி 26 Nov 2018 1:36 AM GMT (Updated: 26 Nov 2018 1:36 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.32 ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை நடைமுறைக்கு வந்த நிலையில், இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.  பெட்ரோல் விலை ரூ.87ஐ கடந்து விற்பனை செய்யப்பட்டது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கடந்த அக்டோபரில் விலை குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.77.69க்கும், டீசல் விலை ரூ.73.63க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 37 காசுகள் குறைந்து ரூ.77.32க்கும், டீசல் விலை 43 காசுகள் குறைந்து ரூ.73.20க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Next Story