கூட்டணி குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும்: வைகோ


கூட்டணி குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் சொல்லட்டும்: வைகோ
x
தினத்தந்தி 26 Nov 2018 6:14 AM GMT (Updated: 26 Nov 2018 6:14 AM GMT)

கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதில், மதிமுகவினரை காயமடைய செய்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சென்னை

திமுக பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில்,

கொள்கை அளவில் ஒத்துப்போவது வேறு, தேர்தல் கூட்டணி என்பது வேறு எனவே இப்போதைக்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக உள்பட எந்த கட்சியும் இல்லை.

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் எங்களுடன் கூட்டணி சேரவுள்ள கட்சிகளின் தலைவர்களுடன் உட்கார்ந்து பேசி, தொகுதி உடன்பாடு வந்த பின்னரே கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இருக்கின்றது என்பதை உறுதி சொல்ல முடியும் என்றும், இப்போதைக்கு காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் திமுகவுடன் கொள்கை அளவில் ஒத்துப்போயிருந்தாலும் அவை கூட்டணியில் இருப்பதாக அர்த்தம் இல்லை என்று துரைமுருகன் கூறியது கூட்டணி கட்சி தலைவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய பதில், மதிமுகவினரை காயமடைய செய்துள்ளது. துரைமுருகன் அவரது பதிலை கூறிவிட்டார், ஸ்டாலின் அவரது முடிவை சொல்லட்டும் என்று  வைகோ கூறினார்.

மேலும், இந்தியாவில் ஜனநாயகம் அழிந்து, தமிழகம் அழிந்து விட கூடாது என்பதற்காகவே காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறோம் என தெரிவித்தார்.

Next Story