7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடக்கும் ம.தி.மு.க. பேராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு வைகோவுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்


7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடக்கும் ம.தி.மு.க. பேராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு வைகோவுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம்
x

7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தி நடக்கும் ம.தி.மு.க. பேராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு என்று வைகோவுக்கு, மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை, 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் குற்றவாளிகள் 7 பேரையும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்யாமல் கவர்னர் காலம் தாழ்த்துவதாக கூறி, கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த போவதாக ம.தி.மு.க., திராவிடர் கழகம் அறிவித்து இருந்தது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும்படி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியிருந்தார்.

இந்த கடிதத்திற்கு பதில் அளித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:–

ம.தி.மு.க.வும், திராவிடர் கழகமும் இணைந்து அறிவித்துள்ள கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டத்திற்கு பாராட்டை தெரிவித்து, போராட்டத்தை வரவேற்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 161–ன் கீழ் தமிழக கவர்னர் செயல்பட்டு, 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டிசம்பர் 3–ந்தேதி நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பது தான் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story