பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகள் சரிவு, டீசல் விலையும் குறைந்தது


பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகள் சரிவு, டீசல் விலையும் குறைந்தது
x
தினத்தந்தி 28 Nov 2018 1:21 AM GMT (Updated: 28 Nov 2018 1:21 AM GMT)

பெட்ரோல் விலை லிட்டருக்கு 53 காசுகள் குறைந்து ரூ. 76.35-க்கு விற்பனையாகிறது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடைய செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. 

கடந்த மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. 

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 53 காசுகள் குறைந்து  ரூ.76.35- க்கு விற்பனையாகிறது. டீசல் விலை லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து ரூ.72.34 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Next Story