தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு அழைப்பு


தமிழக அரசு நாளை பேச்சுவார்த்தை நடத்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுக்கு அழைப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 1:04 PM GMT (Updated: 29 Nov 2018 1:04 PM GMT)

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடத்த உள்ள போராட்டத்தினை கைவிட வலியுறுத்தி நாளை பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதிய முறை ஆகியவற்றை ரத்து செய்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் வருகிற டிசம்பர் 4ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் மாதம் 4ந்தேதி நடைபெற உள்ள காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்தினை கைவிட வலியுறுத்தி நாளை பேச்சுவார்த்தைக்கு வரும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

Next Story