புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் - தமிழக அரசு


புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத  மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் - தமிழக அரசு
x
தினத்தந்தி 5 Dec 2018 8:04 AM GMT (Updated: 5 Dec 2018 8:04 AM GMT)

புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் என ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு கூறி உள்ளது.

மதுரை,

கஜா நிவாரணப் பணிகள் தொடர்பாக   ஐகோர்ட் மதுரை கிளையில்  தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

* புயல் பாதிப்பு பகுதிகளில் குடிநீர் வசதி முழுவதுமாக செய்யப்பட்டு விட்டது. 

* புயல் பாதித்த பகுதிகளில் 100 சதவீத  மின் விநியோகம் அளிக்க ஒரு வாரம் ஆகும் என கூறப்பட்டு உள்ளது.

புயல் பாதிப்பு குறித்த கணக்கெடுப்பில் எண்ணிக்கை மாறுபட்டதை தொடர்ந்து, நிவாரண பொருட்களை அதிகாரிகள் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுத்ததை அடுத்து நீதிபதிகள்  நிவாரணப் பொருட்களை திரும்ப அனுப்பக் கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.

விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர். 

Next Story