பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைவு, டீசல் விலையும் குறைந்தது


பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைவு,  டீசல் விலையும் குறைந்தது
x
தினத்தந்தி 8 Dec 2018 1:50 AM GMT (Updated: 8 Dec 2018 1:50 AM GMT)

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.73.33 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னை,

கிடுகிடு’வென உயர்ந்து வாகன ஓட்டிகளை பீதியடையச் செய்த பெட்ரோல்-டீசல் விலை, கடந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தை சந்திக்க தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17- ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.86.10-க்கும், டீசல் ரூ.80.04-க்கும் விற்பனை ஆனது. அதனைத் தொடர்ந்து பெட்ரோல்-டீசல் விலை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. நேற்று சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.57 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில்,  இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் குறைந்து ரூ.73.33 ஆகவும், டீசல் விலை 26 காசுகள் குறைந்து 68.93 ஆகவும் விற்பனை செயப்படுகின்றது.

Next Story