ஜெயலலிதாவை விட்டு அவரது சொந்தங்கள் விலகி இருந்ததற்கான காரணம் என்ன?


ஜெயலலிதாவை விட்டு அவரது சொந்தங்கள் விலகி இருந்ததற்கான காரணம் என்ன?
x
தினத்தந்தி 8 Dec 2018 8:21 AM GMT (Updated: 8 Dec 2018 8:21 AM GMT)

ஜெயலலிதாவை விட்டு அவரது சொந்தங்கள் விலகி இருந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது உறவினர் மகள் விளக்கம் அளித்து உள்ளார்.

சென்னை,

ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலியையொட்டி தந்தி டிவி  வெளியிட்டு வரும் ஜெ ஜெயலலிதாவாகிய நான் எனும் நிகழ்ச்சியில், 

ஜெயலலிதாவின் உறவினர் மகள் கூறி இருப்பதாவது:-

அத்தை முதன்முறையாக அரசியலில் காலூன்றி ஜெயிக்கும் வரைக்கும் வெகு ப்ரியமாகவும், சுமுகமாகவும் அவர் எங்களுடன் பழகினார். ஆனால், அதிமுகவின் செயலாளராக ஜெயித்த பிறகு அவருக்கும், எங்களுக்குமான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கியது. ஏனென்றால் உறவினர்களில் என் அப்பா உட்பட பலருக்கும் அவர் அரசியலில் ஈடுபடுவது பிடிக்காமல் இருந்த காரணத்தால் அவர் எங்களைப் புறக்கணிக்க ஆரம்பித்திருக்கலாம்.

 அவருடனான உறவில் விரிசல் விழுந்ததற்கான காரணமாக வேறு யாரையும் குறிப்பிடுவதைக் காட்டிலும் அவரே தான் காரணமாக இருந்தார் என்று தான் எனக்குச் சொல்லத் தோன்றுகிறது. ஏனென்றால் குடும்பத்தில் அவரது தலைமுறை சார்ந்த உறவினர்களின் இறப்பைக் கூட கண்டுகொள்ளாமல் அவர் இருந்த போது பிறகு எங்களையெல்லாமா அவர் பொருட்படுத்தப் போகிறார். 

அதனால் விலகி இருப்பதே நல்லது என்ற முடிவுக்கு வந்து விட்டோம். அவர் தயவில் வாழ வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லாத காரணத்தால் நாங்களும் அவரைத் தள்ளி நின்று பார்த்தோமே தவிர போய் ஒட்டிக் கொள்ள நினைக்கவில்லை என்பதாக ஜெயலலிதாவின் உறவினர் மகள் தனது கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

அதுபோல் ஜெயலலிதாவுக்கு நடந்த திருமண ஏற்பாடுகள் குறித்த பிரத்யேக தகவல்களும் இடம் பெற்று உள்ளது.Next Story