தேர்தல் அறிக்கையை வைத்து தான், மக்களுக்கு கட்சி மீது ஒரு சித்திரம் வரும்; ப. சிதம்பரம்


தேர்தல் அறிக்கையை வைத்து தான், மக்களுக்கு கட்சி மீது ஒரு சித்திரம் வரும்; ப. சிதம்பரம்
x
தினத்தந்தி 22 Dec 2018 1:26 PM GMT (Updated: 22 Dec 2018 1:36 PM GMT)

தேர்தல் அறிக்கையை வைத்து தான், மக்களுக்கு கட்சி மீது ஒரு சித்திரம் வரும் என ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் எம்.பி. தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்து கேட்புக்கூட்டம் நடந்தது.  இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார்.  அவர் பேசும்பொழுது, தேர்தல் அறிக்கையை வைத்து தான், மக்களுக்கு கட்சி மீது ஒரு சித்திரம் வரும்.

அண்மையில் நடந்த தேர்தலில் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது விவசாய கடன் தள்ளுபடி என்பது தான் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் கூறும்பொழுது, அனைத்து மக்களுக்கும் சேர்த்துதான் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படுகிறது.  காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக்கு எழுத்து மூலமாகவும் இணையதளம் மூலமாகவும் கருத்து தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

Next Story