சென்னையில் பெட்ரோல் விலை இன்று 22 காசுகள் குறைவு


சென்னையில் பெட்ரோல் விலை இன்று 22 காசுகள் குறைவு
x
தினத்தந்தி 24 Dec 2018 1:20 AM GMT (Updated: 24 Dec 2018 1:20 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 22 காசுகள் குறைந்து ரூ.72.48 ஆக விற்பனையாகிறது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது.கடந்த சில தினங்களாக பெட்ரோல் விலை ஏறுமுகத்துடன் காணப்படுகிறது. 

இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. 
 சென்னையில் பெட்ரோல் விலை 22 காசுகள் குறைந்து ரூ.72.48க்கு விற்பனை செய்யப்படுகிறது.  இதேபோன்று டீசல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.67.38-க்கு விற்பனையாகிறது.

Next Story