‘தலைமை முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்’ விஜயகாந்த் மகன் பேட்டி


‘தலைமை முடிவெடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன்’ விஜயகாந்த் மகன் பேட்டி
x
தினத்தந்தி 25 Dec 2018 7:30 PM GMT (Updated: 25 Dec 2018 6:46 PM GMT)

சென்னை தண்டையார்பேட்டை சேனியம்மன் கோவில் தெருவில் உள்ள தேவாலயத்தில் தே.மு.தி.க. சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

பிராட்வே,

இதற்கு வடசென்னை மாவட்ட செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். இதில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் முதல் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு ஏழை-எளிய மக்களுக்கு உணவு மற்றும் கேக் வழங்கினார். பின்னர் விஜயபிரபாகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். தே.மு.தி.க.வை பொறுத்தவரை கட்சியில் எந்தவித குளறுபடியும் இல்லை. நான் அரசியலுக்கு வருவதில் கட்சியில் எனக்கு எந்த கட்டுபாடும் இல்லை. கட்சி தலைவரும், தலைமையும் முடிவு எடுத்தால் தேர்தலில் போட்டியிடுவேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி குறித்து கட்சியின் தலைமை அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story