ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல்செய்ய தயாரா? -தி.மு.க. கேள்வி


ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம் என பிரமாண வாக்குமூலம் தாக்கல்செய்ய தயாரா? -தி.மு.க. கேள்வி
x
தினத்தந்தி 26 Dec 2018 9:31 AM GMT (Updated: 26 Dec 2018 9:31 AM GMT)

நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் முன்பு ‘ஜெயலலிதாவின் மரணத்திற்கு தி.மு.க.தான் காரணம்’ என்று பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யத் தயாரா?என தம்பிதுரைக்கு திமுக அமைப்புச் செயலாளர் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை

மக்களவை துணை சபாநாயகர்  தம்பிதுரை  தி.மு.க. தொடர்ந்த வழக்கே ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம் என்றும் அதற்கு வரும் தேர்தலில் உரிய பதிலடி கொடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் தம்பிதுரை பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவரது உடல்நிலை குறித்து தம்பிதுரை அளித்த பேட்டி பற்றி தி.மு.க. சார்பில் குறுக்கு விசாரணை செய்து பல உண்மைகள் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story