லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவை அமைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க இயலாது -மு.க.ஸ்டாலின்


லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவை அமைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க இயலாது -மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 27 Dec 2018 8:48 AM GMT (Updated: 27 Dec 2018 8:48 AM GMT)

லோக் ஆயுக்தா தலைவரை தேர்வு செய்யும் தேடுதல் குழுவை அமைப்பதற்கான கூட்டத்தில் பங்கேற்க இயலாது என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை

தமிழ்நாடு லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழுவை அமைப்பதற்காக நாளை  தேர்வுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில்  பங்கேற்க இயலாது என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் முதலமைச்சர் தலைமையிலான 3 பேர் தேர்வுக்குழு ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஐகோர்ட்  நீதிபதி தலைவராக இடம்பெறும் 5 பேர் குழுவாக இல்லை.

துணைச் செயலாளர் தலைமையில் விசாரணைக் குழு என்பது வலுவற்றது. யாரும் செல்வாக்கு பிரயோகித்திட இயலாத, கடுமையான நடவடிக்கை எடுக்கும் அமைப்புக்குப் பதில் அரசுக்கு பரிந்துரை செய்யும் அஞ்சல் நிலையம் போன்ற அமைப்பாகவே லோக் ஆயுக்தா உருவாக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பல்லும் இல்லாத பவரும் இல்லாத அச்சடித்த பதுமை போன்று அசைய முடியாத செயலற்ற அமைப்பை ஏற்படுத்த அ.தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாகவும், உள்ளீடற்ற, வலிமையற்ற தக்கை போன்ற லோக் ஆயுக்தா அமைப்பை தி.மு.க. எதிர்ப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், தேர்வுக் குழுக்கூட்டத்தில் பங்கேற்பது ஊழல் ஒழிப்பிற்கு உதவாது என்றும் கூறியுள்ளார்.

Next Story