சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு


சென்னையில்  பெட்ரோல், டீசல் விலை இன்று குறைவு
x
தினத்தந்தி 28 Dec 2018 1:43 AM GMT (Updated: 28 Dec 2018 1:43 AM GMT)

பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வருவது வாகன ஓட்டிகளுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையிலும் ஏற்றம், இறக்கம் காணப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக  பெட்ரோல் விலை இறங்கு முகத்தில் உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைந்து ரூ.72.16 ஆக விற்பனையாகிறது. டீசல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து, ஒரு லிட்டர் ரூ.67.16 ஆக  விற்பனை செய்யப்படுகின்றது.  

இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை வீழ்ச்சியை சந்தித்து இருப்பது இந்திய வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


Next Story