திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு


திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? அறிக்கை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 4 Jan 2019 3:53 PM GMT (Updated: 4 Jan 2019 3:53 PM GMT)

திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக அறிக்கையை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

திருவாரூரில் 28-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வருவதால் நிவாரணப் பணிகள் பாதிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கிடையே திருவாரூர் இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்தில்  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மனு அளித்தார். கஜா புயல் பாதிப்பு சீரமைப்பு பணிகள் நிலை பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசித்த பின்னர் முடிவெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூரில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இந்நிலையில் திருவாரூரில் தேர்தலை நடத்த முடியுமா? முடியாதா? என்பது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Next Story