கடலூரில் ஜனவரி.26,27ல் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்


கடலூரில் ஜனவரி.26,27ல் கமல்ஹாசன் சுற்றுப்பயணம்
x

கடலூரில் ஜனவரி.26,27ல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

கடலூர்,

கமல்ஹாசன் நடித்து 1996-ல் வெளியாகி வசூல் குவித்த படம் இந்தியன். தற்போது இதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் தயாராகிறது. ஷங்கர் டைரக்டு செய்கிறார். கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன் வயதான தோற்றத்தில் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இதற்காக பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார். 

இந்த படப்பிடிப்பின் இடைவேளையிலும் கமல்ஹாசன் தனது மக்கள் நீதி மய்ய கட்சி பணியிலும் ஈடுபட்டு வருகிறார். கமல்ஹாசன் கடலூரில் ஜனவரி.26,27ல்  சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

 கமல்ஹாசன் ஜன.26ல் குணமங்கலம், அதிசயநத்தம் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்கிறார். அடுத்ததாக ஜன.27ல் கடலூர் அரசு பணியாளர் சங்க மாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

Next Story