அராஜக மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், திமுக ஊராட்சிசபைக் கூட்டங்கள்- மு.க.ஸ்டாலின்


அராஜக மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், திமுக ஊராட்சிசபைக் கூட்டங்கள்- மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 29 Jan 2019 7:46 AM GMT (Updated: 29 Jan 2019 7:46 AM GMT)

அராஜக மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், திமுக ஊராட்சிசபைக் கூட்டம்! என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தருமபுரி

தருமபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செட்ரப்பட்டியில் திமுக சார்பில் ஊராட்சி சபைக் கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது  அவர் பேசியதாவது;-

அராஜக மத்திய, மாநில அரசுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும், செட்ரப்பட்டி திமுக ஊராட்சிசபைக் கூட்டம்!

தமிழகத்தில் எந்த பயனும் இல்லாத ஆட்சி நடைபெறுகிறது.  21 தொகுதிகளில் திமுக வெற்றிபெறும் என்பதாலேயே, இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத காரணத்தினாலேயே குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில், பிரதமர் மோடியையும் விசாரிக்க வேண்டும். ஊழல் செய்த முதல்வரை பார்த்திருக்கிறோம்; ஆனால், கொலை செய்தவர் தமிழக முதல்வர்.

உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது நான் இங்கு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்டேன். தர்மபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தி.மு.க. ஆட்சியில் தான் நிறைவேற்றினோம்.

தலைவர் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்தபோது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக ஜப்பானில் இருந்து நிதிஉதவி பெற்று தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு அ.தி.மு.க. ஆட்சியமைத்தது. இருந்தபோதிலும் தர்மபுரி மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் 40 சதவீதம்தான் தண்ணீர் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 50 சதவீதமும் தான் கொடுக்கப்பட்டது.

தாங்கள் தான் இந்த பகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்ததாக அ.தி.மு.க.வினர்  கூறி வருகின்றனர்.

ஆனால், இந்த செயல்முறைக்கு தீர்வு காண ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான ஏற்பாடுகளை தி.மு.க. தான் செயலாற்றியது. அப்போது முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கலைஞர், துணை முதல்-அமைச்சராக இருந்த நான் ஆகியோர் சேர்ந்து ஜப்பான் நாட்டில் இருந்து நிதி உதவி பெற்று ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தோம் என கூறினார்.

Next Story