சென்னையில் 2வது நாளாக வருமான வரி துறையினர் சோதனை


சென்னையில் 2வது நாளாக வருமான வரி துறையினர் சோதனை
x
தினத்தந்தி 30 Jan 2019 2:56 AM GMT (Updated: 30 Jan 2019 2:56 AM GMT)

சென்னை மற்றும் கோவையில் வரி ஏய்ப்பு புகாரில் வணிக நிறுவனங்களின் 74 இடங்களில் வருமான வரி துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை 

தமிழகத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பு செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.  இதை தொடர்ந்து சென்னையில் ஜி.எஸ். ஸ்கொயர், லோட்டஸ் குரூப், ரேவதி குழுமம், லெஜென்ட் சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட பிரபல ஜவுளி நிறுவனங்களில் நேற்று வருமான வரி சோதனை நடத்தப்பட்டது.

கோவையில் 2 இடங்களிலும்  வருமான வரிசோதனை நடந்தது. வருமான வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக இந்த நிறுவனங்களில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 74 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் இன்று 2வது நாளாக வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story