ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு


ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் என அறிவிப்பு
x
தினத்தந்தி 30 Jan 2019 12:03 PM GMT (Updated: 30 Jan 2019 12:03 PM GMT)

ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கீழ் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடைபெற்று வந்த வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும் என்று முதல் அமைச்சர், எதிர்க்கட்சி  தலைவர் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்து இருந்தனர். 

இந்த நிலையில், பள்ளித்தேர்வுகள் தொடங்க இருப்பதை கருத்தில் கொண்டு  போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது. சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்ற ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகளின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

Next Story