தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!


தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்!
x
தினத்தந்தி 22 Feb 2019 9:58 AM GMT (Updated: 22 Feb 2019 9:58 AM GMT)

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை

பாராளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

மக்களவை தேர்தலுக்கான ஏற்பாட்டுகள் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், திருத்தத்திற்காக சிறப்பு முகாம்களும் நடைபெற உள்ளன. இந்நிலையில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 9 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தினார்.

கூட்டத்தில்  தி.மு.க. சார்பில் வக்கீல் கிரிராஜன், காங்கிரஸ்- தாமோதரன், பொன்.கிருஷ்ணமூர்த்தி. பாரதிய ஜனதா- சவுந்தரராஜன். தேசியவாத காங்கிரஸ்- சாரதி, அபுபக்கர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- ஆறுமுகநயினார், உதயகுமார். இந்திய கம்யூனிஸ்டு- ஏழுமலை, பெரியசாமி. பகுஜன் சமாஜ்- பாரதிதாசன், மாணிக்கராஜ்.  ஆகியோர் கலந்து கொண்டனர்

வாக்காளர் பட்டியல், மக்களவை தேர்தல் பணிகள், அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மக்களவை தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றியும் அரசியல் கட்சிகளிடம்  கருத்து கேட்கப்பட்டது. 


Next Story