புல்வாமா தாக்குதலில் இறந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்; ரூ.2 லட்சம் நிதியுதவி


புல்வாமா தாக்குதலில் இறந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல்; ரூ.2 லட்சம் நிதியுதவி
x
தினத்தந்தி 25 Feb 2019 2:58 PM GMT (Updated: 25 Feb 2019 2:58 PM GMT)

புல்வாமா தாக்குதலில் இறந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கினார்.

தூத்துக்குடி,

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டம் அவந்திப்போரா பகுதியில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் துணை ராணுவ வீரர்கள் கடந்த 14ந்தேதி 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர்.  அவர்கள் வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகமது இயக்க தீவிரவாதி வெடிகுண்டு ஏற்றிய சொகுசு காரை கொண்டு மோதி வெடிக்க செய்ததில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.  இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் தமிழக வீரர்கள் 2 பேர் பலியாகினர்.  உயிரிழந்த வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டு முழு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

புல்வாமா தாக்குதலில் இறந்த வீரர் சுப்பிரமணியன் இல்லம் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் அமைந்துள்ளது.  அவரது இல்லத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அக்கட்சியின் எம்.பி. கனிமொழி ஆகியோர் இன்று சென்று அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.  அதன்பின், தி.மு.க. சார்பில் 2 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவி காசோலைகளை குடும்பத்தினரிடம் அவர்கள் வழங்கினார்கள்.

Next Story