மத்திய அரசு பணி 1,351 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி நாள் 31-ந் தேதி


மத்திய அரசு பணி 1,351 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் கடைசி நாள் 31-ந் தேதி
x
தினத்தந்தி 16 Aug 2019 6:47 PM GMT (Updated: 16 Aug 2019 6:47 PM GMT)

மத்திய அரசு பணி 1,351 காலி பணி இடங்களுக்கு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றன.

சென்னை, 

மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் உள்ள 230 பிரிவுகளில் 1,351 காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கின்றன. இதில் 17 பிரிவுகளை சார்ந்த 67 பணியிடங்கள் சென்னை தென்மண்டல மத்திய பணியாளர் தேர்வாணையத்தை சேர்ந்தது ஆகும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 31-ந் தேதி ஆகும். தேர்வு அக்டோபர் மாதம் 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை
www.ssc.nic.in, www.sscsr.gov.in
என்ற இணையதள முகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் சென்னை மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மண்டல இயக்குனர் கே.நாகராஜா வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story