விவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக சட்டம் இயற்றியது தமிழக அரசு


விவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக சட்டம் இயற்றியது தமிழக அரசு
x
தினத்தந்தி 29 Oct 2019 4:04 PM GMT (Updated: 29 Oct 2019 4:04 PM GMT)

விவசாயிகள் வருமானத்தை பெருக்க இந்தியாவில் முதன்முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது.

சென்னை

தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்த பண்ணையம் மற்றும் சேவைகள் என்ற பெயரில் தமிழக அரசு புதிய சட்டம் இயற்றி உள்ளது.  இந்த சட்டத்தின்படி, கொள்முதலாளர் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் விலை ஒப்பந்தம் செய்ய முடியும்.

ஒப்பந்தம் செய்த அன்று நிர்ணயம் செய்யப்பட்ட விலையிலேயே உற்பத்தி பொருட்களை பரிமாற்றம் செய்ய சட்ட பாதுகாப்பு உண்டு.

அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை தடுப்பதற்காகவும் சட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது.  வேளாண் பொருள் கொள்முதலாளர், வணிக வரித்துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் இதுபற்றி பதிவு செய்து கொள்ள வேண்டும்.  தமிழக அரசின் இந்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Next Story