சென்னையில் 14 சதவீதம் மழை குறைவு – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பை விட மழை 14 சதவீதம் குறைவாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;-
"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரையிலான பருவமழை காலத்தில் சென்னையில் இயல்பை விட 14% மழை குறைவாக பெய்துள்ளது. புதுச்சேரியில் 30 சதவீதமும், வேலூர் மாவட்டத்தில் 25 சதவீதமும் மழை குறைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழக மாவட்டங்களில் நேற்றுவரை வடகிழக்கு பருவமழையால் கிடைத்த மழை விவரங்களை வெளியிட்டுள்ளது.
01.10.2019 முதல் 11.12.2019 வரை பெய்த மழை விவரம் வருமாறு;-
மாவட்டம் | பதிவான மழை (மி.மீ) | இயல்பு மழை (மி.மீ) | வேறுபாடு(%) |
அரியலூர் | 477.6 | 501.3 | -5 |
சென்னை | 585.1 | 683.4 | -14 |
கோயம்புத்தூர் | 431.6 | 319.8 | 35 |
கடலூர் | 634.5 | 619.9 | 2 |
திண்டுக்கல் | 370.8 | 416.1 | -11 |
ஈரோடு | 318.5 | 287.3 | 11 |
காஞ்சிபுரம் | 663.4 | 625.8 | 6 |
கன்னியாகுமரி | 486.7 | 496.2 | -2 |
காரைக்கால் | 836.9 | 881.1 | -5 |
கரூர் | 244.1 | 280.1 | -13 |
கிருஷ்ணகிரி | 259.2 | 273.9 | -5 |
மதுரை | 294.2 | 381.0 | -23 |
நாகப்பட்டினம் | 893.9 | 797.0 | 12 |
நாமக்கல் | 269.5 | 274.9 | -2 |
நீலகிரி | 765.8 | 438.2 | 75 |
பெரம்பலூர் | 321.3 | 421.2 | -24 |
புதுச்சேரி | 545.2 | 421.2 | -30 |
புதுக்கோட்டை | 498.8 | 358.9 | 39 |
ராமநாதபுரம் | 731.3 | 451.9 | 62 |
சேலம் | 306.5 | 335.5 | -9 |
சிவகங்கை | 467.8 | 372.8 | 25 |
தஞ்சாவூர் | 487.6 | 514.9 | -5 |
தேனி | 297.6 | 332.7 | -11 |
திருநெல்வேலி | 622.7 | 414.8 | 50 |
திருப்பூர் | 251.8 | 294.1 | -14 |
திருவள்ளூர் | 542.8 | 571.2 | -5 |
திருவண்ணாமலை | 334.3 | 414.2 | -19 |
திருவாரூர் | 595.0 | 636.7 | -7 |
தூத்துக்குடி | 517.2 | 378.7 | 37 |
திருச்சி | 302.4 | 352.5 | -14 |
வேலூர் | 252.3 | 334.8 | -25 |
விழுப்புரம் | 403.9 | 449.7 | -10 |
விருதுநகர் | 367.6 | 359.0 | 2 |