8 பேர் கைது; 8 கோடி தமிழர்கள் கோலம் போட தயாராக உள்ளனர்: மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.


8 பேர் கைது; 8 கோடி தமிழர்கள் கோலம் போட தயாராக உள்ளனர்:  மா. சுப்பிரமணியன் எம்.எல்.ஏ.
x
தினத்தந்தி 31 Dec 2019 7:28 AM GMT (Updated: 31 Dec 2019 7:28 AM GMT)

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பில் கோலம் போட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 8 கோடி தமிழர்கள் கோலம் போட தயாராக உள்ளனர் என தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை,

டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் கடந்த அக்டோபர் 24ந்தேதி காலை 9 மணியில் இருந்து இன்று வரை (டிசம்பர் 31) தினமும் நிலவேம்பு கசாயம் வழங்கப்படும் என தி.மு.க. எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன் சார்பில் அறிவிப்பு வெளியானது.  இதன்படி தினமும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டின் கடைசி நாள் மற்றும் டிசம்பர் 31ந்தேதியான இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, ஒட்டுமொத்த தமிழர்களும் வாசலில் கோலமிட தொடங்கி விட்டனர்.  கோலமிட்டு போராடியதற்காக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  8 பேர் என்பது 8 லட்சம் என்றாகி இன்று 8 கோடி தமிழர்களும் கோலம் போட காத்திருக்கின்றனர் என கூறினார்.

Next Story