போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பு


போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 11:00 PM GMT (Updated: 27 Feb 2020 10:49 PM GMT)

போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி செய்த வழக்கில் 25 ஆண்டுகளுக்கு பிறகு 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

சென்னையை சேர்ந்த ராஜசேகரன், நடேஷ்குமார் ஆகியோர் கடந்த 1993-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி வரைவோலைகளை(டிமான்ட் டிராப்ட்) கொடுத்து ரூ.2.70 கோடி மோசடி செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 1995-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story