மாநில செய்திகள்

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி + "||" + Kanyakumari Killed in government hospital 3 people had no corona damage Confirmed in the experiment

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை - பரிசோதனையில் உறுதி
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரத்யேக ‘வார்டில்’ வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை ‘வார்டில்’ அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை உட்பட 3 பேர் நேற்று முன்தினம் உயிரிழந்தனர். இதில் அந்த குழந்தைக்கு பிறவி எலும்பு நோய் உள்ளதும், 66 வயது ஆணுக்கு நீண்ட நாள் சிறுநீரக கோளாறு இருந்ததும், 24 வயது வாலிபருக்கு நிமோனியா பாதிப்பால் ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

உயிரிழந்த இந்த 3 பேரின் தொண்டை சளி மற்றும் ரத்த மாதிரிகள் முன்னதாகவே எடுக்கப்பட்டு கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன. இந்த பரிசோதனை முடிவுகள் தற்போது கிடைத்துள்ளன.

இதுகுறித்து நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த 3 பேரின் தொண்டை மற்றும் ரத்த மாதிரிகளின் முடிவுகளில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கன்னியாகுமரியில் கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு - சுகாதார பணியாளர்களுக்கு பாராட்டு
கன்னியாகுமரியில் வெளி மாவட்டத்தில் இருந்து வருகிறவர்களை தனிமை படுத்தி வைத்துள்ள முகாம்களை மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே ஆய்வு செய்தார். அப்போது, தூய்மை பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை பாராட்டினார்.
2. கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை: சுகாதாரத்துறை
கன்னியாகுமரியில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; கன்னியாகுமரியில் 31-ந்தேதி வரை படகு போக்குவரத்து ரத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
4. கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பதில்
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் காங்கிரசார் நடத்திய பேரணியில் தடியடி நடத்தப்படவில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
5. சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதி
சென்னையில் இருந்து வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியில் மின்சாரம் இல்லாததால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.