கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை


கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
x
தினத்தந்தி 30 March 2020 6:30 AM GMT (Updated: 30 March 2020 6:30 AM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உள்ளது. தமிழகத்தில்  கொரோனா வைரஸ் பரவலைக்க கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல் அமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.  சென்னையில் உள்ள  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில்,  அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றம் சுகாதாரத்துறை செயலாளர் பங்கேற்றனர். 

Next Story