ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 5 Oct 2020 2:25 PM IST (Updated: 5 Oct 2020 2:27 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புவனேஷ்வர், 

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தொற்று பரவல் இன்னும் கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 74,442 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 903 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி ஒடிசாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒடிசாவில் 30,301 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,98,194 பேர் குணமடைந்தநிலையில், 892 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். 

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் இதுவரை அதிகபட்சமாக 968 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு தகவல் வெளியிட்டுள்ளது. 

Next Story