மாநில செய்திகள்

உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு வந்த 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் + "||" + Seizure of 3 kg gold jewelery brought on the train without proper documents

உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு வந்த 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

உரிய ஆவணங்கள் இன்றி ரெயிலில் கொண்டு வந்த 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல்
ரெயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 3 கிலோ தங்க நகைகள் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேலம், 

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் நேற்று பகலில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து கோவை செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதில் வந்த 2 வாலிபர்கள் ரெயில் பெட்டியில் இருந்து கீழே இறங்கி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களது கைகளில் கைப்பை வைத்திருந்தனர். இவர் களின் நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 2 பேரையும் அழைத்து விசாரித்தனர். அப்போது இந்தியில் இருவரும் பேசினர். எங்கு செல்கிறீர்கள்? என்ன கொண்டு செல்கிறீர்கள்? என கேட்டதற்கு சரியாக பதில் கூறாததால் இருவரிடம் இருந்த கைப்பையை வாங்கி சோதனையிட்டனர். இதில் 3 கிலோ தங்க நகைகள் இருந்தன.

2 பேர் கைது

அவை அனைத்தும் பெண்கள் கழுத்தில் அணியும் தங்கச்சங்கிலிகள். இதன் மதிப்பு ரூ.1 கோடியே 41 லட்சம் ஆகும். இவர்களிடம் தங்க நகைகள் எடுத்துச் செல்ல ரசீதோ அல்லது வேறு எந்த ஆவணங்களோ இல்லை. மேலும் நகைகள் பற்றி கேட்டதற்கு சரியான விளக்கம் தரவில்லை. முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.

இதையடுத்து ரெயிலில் நகைகளை கடத்தி வந்த 2 பேரையும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்த சிவராஜ் (வயது 22), பாகிராத் (30) என தெரியவந்தது. ரெயிலில் நகைகள் கொண்டு வந்து கைதான 2 பேர் குறித்து சேலம் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது; 300 மதுபாட்டில்கள் பறிமுதல்
கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில், திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள 451 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
3. சென்னை விமான நிலையத்தில்ரூ.12 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வீடுகளை சுத்தம் செய்யும் கருவிக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.12 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 251 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
4. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
5. சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.28 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.