தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது - சுகாதாரத்துறை தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 23 Feb 2021 6:51 PM GMT (Updated: 23 Feb 2021 6:51 PM GMT)

தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டி உள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

கொரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கடந்த மாதம் 16-ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தமிழகத்தில் 35-வது நாளாக நேற்று 699 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 ஆயிரத்து 332 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். அதில் 9 ஆயிரத்து 947 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 365 பேர் 2-வது முறையாகவும் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 4,00,698 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 3 லட்சத்து 92 ஆயிரத்து 623 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்ப மருந்தும், 8 ஆயிரத்து 75 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் போட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

Next Story