மாநில செய்திகள்

தமிழர்களை இழிவுப்படுத்தும் தொடர்: ஒளிபரப்பை நிறுத்த சீமான் கடிதம் + "||" + Serial insulting Tamils: Seeman's letter to stop broadcasting

தமிழர்களை இழிவுப்படுத்தும் தொடர்: ஒளிபரப்பை நிறுத்த சீமான் கடிதம்

தமிழர்களை இழிவுப்படுத்தும் தொடர்: ஒளிபரப்பை நிறுத்த சீமான் கடிதம்
தமிழர்களை இழிவுப்படுத்தும் தொடர்: ஒளிபரப்பை நிறுத்த சீமான் கடிதம்.
சென்னை,

தமிழர்களுக்கு எதிரான தி பேமிலி மேன்-2 என்ற இணையத்தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி அமேசான் பிரைம் தலைமை அதிகாரி அபர்ணா பிரோகித்துக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-


உலக முழுவதும் வாழும் தமிழர்களின் பெரும் எதிர்ப்பையும் மீறி கடந்த 4-ந்தேதி உங்களது அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் தமிழர்களை இழிவுப்படுத்தும் தி பேமிலி மேன்-2 எனும் இணையத்தொடர் வெளியானது. இது தமிழர்களுக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு செய்யத்தறி எங்கள் உணர்வுகளை அலட்சியம் செய்து உதறித்தள்ளினால், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து அமேசான் பிரைம் வீடியோ உட்பட அமேசான் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்கச் செய்யும் வகையில் மாபெரும் கருத்து பரப்புரையைத் தீவிரமாக முன்னெடுப்போம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு: மோடிக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
2. 10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்
10.5 சதவீத இடஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாக உறுதி செய்வதோடு சாதிவாரி, மொழிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் சீமான் வலியுறுத்தல்.
3. தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம்; பா.ஜ.க. தலைவர் கடிதம்
என்னை சந்திக்க வரும் தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை உள்ளிட்டவற்றை கொண்டு வர வேண்டாம் என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
4. பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார்: பா.ஜ.க.வை எதிா்க்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் சீமான் அறிக்கை
பகைக்காது அரசியல் செய்ய முனைகிறார்: பா.ஜ.க.வை எதிா்க்க மு.க.ஸ்டாலின் முன்வர வேண்டும் சீமான் அறிக்கை.
5. சீமான்-லிங்குசாமி மோதல்: ஒரே கதைக்கு 2 பேர் உரிமை கொண்டாடுகிறார்கள்
ஒரே கதைக்கு டைரக்டர்கள் சீமான், லிங்குசாமி ஆகிய இருவரும் உரிமை கொண்டாடுகிறார்கள். இது தொடர்பாக திரைப்பட இயக்குனர்கள் சங்கம், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் ஆகிய 2 சங்கங்களிலும் புகார் கொடுக்கப்பட்டு இருக்கிறது.