மாநில செய்திகள்

கொரோனா அதிகரிக்கும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? சீமான் கண்டனம் + "||" + Will Tasmac open liquor stores as the Corona 2nd wave accelerates?

கொரோனா அதிகரிக்கும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? சீமான் கண்டனம்

கொரோனா அதிகரிக்கும் நிலையில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதா? சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த்தொற்றின் 2-வது அலை பரவலால் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆட்பட்டு, பல நூற்றுக்கணக்கான உயிர்களைத் தினந்தோறும் பலி கொடுத்துக்கொண்டிருக்கிற பேரிடர் மிகுந்த தற்காலச் சூழலில் மதுபான கடைகளைத் திறக்க முடிவெடுத்திருக்கும் தமிழ்நாடு அரசின் செயல் பேரதிர்ச்சி தருகிறது.

நோய்த்தொற்று பரவல் கட்டுக்குள் வராத இக்கட்டான நிலையில் மக்களின் நலனைத் துளியும் சிந்திக்காது அவசரகதியில் மதுபான கடைகளைத் திறக்க முடிவெடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. பெருந்தொற்றுச் சூழலை உருவாக்க தமிழ்நாடு அரசே வாசல் திறந்துவிடுவதேன்?

நோய்த்தொற்று குறைந்துவிட்டதாக கூறி மதுபான கடைகள் திறக்கப்பட்டதை நியாயப்படுத்த முற்படும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மூன்றாம் அலைப் பரவலுக்கு வாய்ப்பிருக்கிறதெனும் மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாததேன்?.

ஆகவே, நாடெங்கிலும் மதுபான கடைகளை திறப்பதற்கு எதிராக எழுந்திருக்கும் எதிர்ப்புணர்வைப் புரிந்துகொண்டு, மக்களின் நலனை மனதில் வைத்து கடந்த காலப்படிப்பினைகளை முன்மாதிரியாக கொண்டு, மதுபான கடைகள் திறக்கும் முடிவை திரும்பப்பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 


தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் புதிதாக 71 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.95 கோடியாக உயர்ந்துள்ளது.
3. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.89 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.95 கோடியை தாண்டியது.
4. சீனாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
சீனாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19.85 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 17.92 கோடியை தாண்டியது.