மாநில செய்திகள்

கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு + "||" + 3 Alliance needed to beat Corona: Poet Vairamuthu record

கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு

கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம்: கவிஞர் வைரமுத்து பதிவு
கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம் என்று கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாம் அலையானது கடந்த மாதம் பெரும் உச்சத்தை எட்டியநிலையில், தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே வரும் ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இதனைத்தொடர்ந்து தளர்வுகள் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறுகையில்,”கொரோனா காலகட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மீறப்பட்டால், எந்த நேரத்திலும் ஊரடங்கு தளர்வு திரும்பப் பெறப்படும். தமிழக மக்கள் காவல்துறையின் கண்காணிப்பு இல்லாமலேயே கட்டுப்பாடுள்ள மக்களாக இருக்க வேண்டும், அந்த விருப்பத்தை தமிழக மக்கள் நிச்சயம் நிறைவேற்றுவார்கள் நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கொரோனாவை வெல்ல 3 கூட்டணி அவசியம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “காக்கும் அரசு, கட்டுப்படும் மக்கள், தடையில்லாத் தடுப்பூசி இந்த முக்கூட்டணியால் மட்டுமே கொன்றழிக்கும் கொரோனாவை வென்றெடுக்க முடியும்” என்று கவிஞர் வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை
ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
2. கோவை மாவட்டத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் ஞாயிற்றுக்கிழமை தியேட்டர்கள், சுற்றுலா மையங்கள் திறக்க தடை
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கோவைக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும், தியேட்டர்கள் சுற்றுலா மையங்கள் திறக்க தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
3. தமிழகத்தில் 1,658 பேருக்கு கொரோனா 14 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் நேற்று 1,658 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 14 மாவட்டங்களில் 29 பேர் உயிரிழந்து உள்ளனர்.
4. மக்களை விட்டு கொரோனா நோய் விலக 48 நாட்கள் மவுன விரதம் இருக்கும் பெண்
மக்களை விட்டு கொரோனா நோய் விலக 48 நாட்கள் மவுன விரதம் இருக்கும் பெண்
5. புதிதாக 22 பேருக்கு கொரோனா
புதிதாக 22 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.