தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கர்நாடகாவுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்


தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கர்நாடகாவுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 4 July 2021 12:21 AM GMT (Updated: 4 July 2021 12:21 AM GMT)

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தடுப்பணை: கர்நாடகாவுக்கு எதிராக சட்டப்போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் தமிழக அரசுக்கு, முத்தரசன் வலியுறுத்தல்.

சென்னை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநில அரசு தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே யார்கோள் என்ற இடத்தில் தடுப்பணை கட்டி முடித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டிற்கு இதுவரை கிடைத்து வந்த நீராதாரத்தை தடுத்துள்ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகளுக்கும், நீர்பகிர்வு கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். ஐம்பது கோடி கன அடி தண்ணீரை தேக்கும் யார்கோள் அணை திட்டத்தால் தமிழ்நாட்டின் குடிநீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.கர்நாடக மாநில அரசின் வரம்பு மீறிய நடவடிக்கைகளை எதிர்த்து சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த ஆதரவைத் திரட்டி தண்ணீர் உரிமை பாதுகாப்புக்கான மக்கள் இயக்கத்தை கட்டமைப்பது உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story