மாநில செய்திகள்

டியூசன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது + "||" + Student pregnancy: Teacher arrested

டியூசன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது

டியூசன் படிக்க வந்த மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் குண்டர் சட்டத்தில் கைது
ஆசிரியர் லோகநாதனை மாவட்ட கலெக்டர் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
அந்தியூர்,

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் வனத்துறை அலுவலகத்திற்கு முன்பு டியூசன் சென்டர் நடத்தி வந்தவர் ஆசிரியர் லோகநாதன் (வயது 39 ). இவர் தனது டியூசன் சென்டரில் பத்தாம் வகுப்பு படித்து வந்த 16 வயது மாணவியை கர்ப்பமாக்கியதாக  மாணவியின் பெற்றோர்  புகார் அளித்தனர். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தில் லோகநாதன் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் உள்ளார்.

தொடர்ந்து இவர் மீது ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசி மோகன் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் கிருஷ்னுண்ணி ஆசிரியர் லோகநாதனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள லோகநாதனை குண்டர் சட்டத்தில் கைது செய்யவும் உத்தரவு வழங்கப்பட்டது.


தொடர்புடைய செய்திகள்

1. ஈரோடு ஆவின் பால்பண்ணையில் மத்திய மந்திரி எல்.முருகன் ஆய்வு
ஈரோட்டில் உள்ள ஆவின் நிறுவனத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
2. ஈரோடு அருகே பாதாள சாக்கடை பணியின் போது வெடி விபத்து - 2 பேர் படுகாயம்
பாதாள சாக்கடை பணிகளின் போது, பாறையை உடைப்பதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டது.
3. ஈரோடு: மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை
ஈரோடு அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நாதஸ்வர கலைஞர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4. பொதுக்கூட்ட மேடையில் பெண் போலீசுக்கு திருமணம் - கி. வீரமணி நடத்தி வைத்தார்
ஈரோட்டில் பொதுக்கூட்ட மேடையில் பெண் போலீசுக்கு திருமணத்தை கி.வீரமணி நடத்தி வைத்தார்.
5. ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் - அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு
ஈரோடு,கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் மொத்தம் 9 ஆற்றுப் பாலங்கள் ரூ.136.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்துள்ளார்.