"எனக்கு ரஜினி போல தான் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினும்..." - கமல்ஹாசன்


கோப்புப் படம்
x
கோப்புப் படம்
தினத்தந்தி 16 May 2022 5:24 AM GMT (Updated: 2022-05-16T10:54:18+05:30)

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என்று விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது நண்பர் என 'விக்ரம்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், சினிமாவும் அரசியலும் ஒட்டிப் பிறந்தவை என்று கூறினார். இந்தியாவின் அழகு அதன் பன்முகத் தன்மைதான் என்று கூறிய அவர், இந்தி ஒழிக என்று சொல்வது என் வேலையில்லை, ஆனால் தமிழ் வாழ்க என சொல்வது என் கடமை என்றும் கூறினார்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலில் தனது நண்பர் என்றும் சினிமாவில் ரஜினிகாந்த் தனது போட்டியாளராக இருந்து கொண்டு நண்பராகவும் இருப்பதுபோல தான் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நட்பு பேணுவதாக கமல்ஹாசன் கூறினார்.

Next Story