மாடு திருடிய3 பேர் கைது
மாடு திருடிய3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 32). சம்பவத்தன்று இவரது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த பசுமாட்டை மர்மநபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து அவர் எடைக்கல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் மாட்டை திருடியது கொட்டையூர் கிராமத்தை சேர்ந்த பூமாலை, மடப்பட்டு பகுதியை சேர்ந்த காத்தவராயன் மனைவி நாககன்னி (47), செம்மணந்தல் கிராமத்தை சேர்ந்த அள்ளிமுத்து (57) ஆகியோர் என்பது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story