இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது


இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது
x

புதுச்சத்திரம் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இரும்பு பொருட்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் செயல்படாத தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் 3 மர்மநபர்கள் ஒரு டிராக்டரில் இரும்பு பொருட்களை திருடிக்கொண்டிருந்தனர். இதைபார்த்த பாதுகாவலர் மனோகரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த 3 பேரையும் பிடித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தியாகவல்லி கிராமத்தை சேர்ந்த நடராஜன் மகன் சுந்தர் (வயது 22), திருச்சோபுரம் பகுதியை சேர்ந்த விஜயன் (46), தியாவல்லி கீழத்தெருவை சேர்ந்த சந்துரு (30) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சுந்தர் உள்பட 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களிடமிருந்த டிராக்டரையும் பறிமுதல் செய்தனர்.


Next Story