4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம்-தங்க தாலிகள் திருட்டு


4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம்-தங்க தாலிகள் திருட்டு
x

4 கோவில்களில் உண்டியலை உடைத்து பணம்-தங்க தாலிகள் திருட்டுபோனது.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

ஜெயங்கொண்டம் அருகே உள்ள பூவாய்குளம் கிராமத்தில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், 2 கிராம் எடையுள்ள 3 தாலிகள் உள்ளிட்டவற்றை திருடிச்சென்றனர். மேலும் அருகே காலனி தெருவில் உள்ள வீரனார் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும், வன்னியர் தெருவில் உள்ள விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் அங்கிருந்த ஆம்ப்ளிபயர் உள்ளிட்டவற்றையும், காளியம்மன் கோவிலில் 7 கிராம் தாலி உள்ளிட்டவற்றையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர். இது குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story