வாலிபரை தாக்கிய 4 பேர் கைது


வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
x

முன்னீர்பள்ளம் அருகே வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

முன்னீர்பள்ளம் அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த அகஸ்டின் கிருபாகரன் (வயது23) என்பவரின் நண்பரான உதயகுமார் என்பவரது வீட்டின் நாய் மீது கடந்த 7-ந்தேதி அதே பகுதியைச் சேர்ந்த சசி என்பவரின் மகன் சிவா, மோட்டார் சைக்கிளில் மோதியதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதை அகஸ்டின் கிருபாகரன் சத்தம் போட்டு சிவாவை விலக்கி விட்டுள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு சம்பவத்தன்று அகஸ்டின் கிருபாகரனை சொக்கலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சசி மகன் சிவா, ராஜேந்திரன் மகன் சிவா (20), வாசு (18), மகேந்திரன் (20), மாரியப்பன் (20) ஆகியோர் சேர்ந்து அவதூறாக பேசி கத்தியால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து அகஸ்டின் கிருபாகரன் முன்னீர்பள்ளம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மருதுகுட்டி வழக்குப்பதிவு செய்து சிவா, வாசு, மகேந்திரன், மாரியப்பன் ஆகிய 4 பேரை கைது செய்தார்.


Next Story