ஜெயங்கொண்டத்தில் 80 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது


ஜெயங்கொண்டத்தில் 80 கிலோ கஞ்சா பறிமுதல்; வாலிபர் கைது
x

ஜெயங்கொண்டத்தில் 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தலைமையிலான தனிப்படை போலீசார் கஞ்சா விற்பனை செய்யப்படுகிறதா? என ஜெயங்கொண்டம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். இதில் அவர் அமிர்தராயன் கோட்டை நாகராஜன் என்பவரது மகன் காசிராஜன் (வயது 21) என்பதும், இவர் தஞ்சாவூரில் இருந்து கொண்டு வந்த 80 கிலோ கஞ்சா பொட்டலங்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கஞ்சா பொட்டலங்களையும், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.


Next Story