திருத்துறைப்பூண்டியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
பஸ்சுக்காக நீண்ட நேரம் மாணவர்கள் காத்திருப்பதால் திருத்துறைப்பூண்டியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பஸ்சுக்காக நீண்ட நேரம் மாணவர்கள் காத்திருப்பதால் திருத்துறைப்பூண்டியில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காத்திருக்கும் நிலை
திருத்துறைப்பூண்டி அதிகளவில் விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் வாழும் பகுதியாகும். இவர்களுடைய பிள்ளைகள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் படித்து வருகின்றனர். மேலும் திருத்துறைப்பூண்டி வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளை திருத்துறைப்பூண்டி நகரத்தில் உள்ள பள்ளியில் தான் படிக்க வைத்துள்ளனர். இவர்கள் மாலை 4 மணிக்கு பள்ளி முடிந்து ஊருக்கு செல்வதற்காக போதிய அளவில் பஸ்கள் இல்லாததால் திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்
அப்படியே பஸ் வந்தாலும் அந்த பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்து ஏறும் போது கீழே விழுந்து காயம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்களின் நலன்கருதி கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.