சென்னையிலிருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு கூடுதல் விமான சேவை


சென்னையிலிருந்து மதுரை, கொச்சி, கோவாவுக்கு கூடுதல் விமான சேவை
x

சென்னை-கோவா இடையே விமான சேவை 6 ஆக உயர்ந்து இருக்கிறது.

ஆலந்தூர்,

சென்னையில் இருந்து மதுரைக்கு தினமும் 6 விமான சேவைகளும் அதே போல் மதுரையில் இருந்து சென்னைக்கு தினமும் 6 விமான சேவைகளும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று முதல் கூடுதலாக சென்னை-மதுரை இடையே 2 சேவைகளும், மதுரை-சென்னை இடையே 2 சேவைகளும் அதிகரித்துள்ளது. இதைப்போல் சென்னை-கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக செல்லக்கூடிய கோவாவிற்கு, சென்னையில் இருந்து இதுவரையில் காலையில் ஒரு விமான சேவை, மாலை ஒரு விமான சேவை என்று 2 விமான சேவைகள் மட்டும் இருந்தது. கோவாவில் இருந்து சென்னை வருவதற்கும் தினமும் 2 விமான சேவைகள் இருந்தன.

தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியதை அடுத்து இன்று முதல் மதியம் 1:50 மணிக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கு கூடுதலாக ஒரு விமான சேவையும், மாலை 6:55 மணிக்கு கோவாவில் இருந்து சென்னைக்கு அந்த விமானம் திரும்பி வருகிறது. இதனால் சென்னை-கோவா இடையே விமான சேவை 6 ஆக உயர்ந்து இருக்கிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story