தி.மு.க. அரசின் புதிய வரி விதிப்பால் மக்களுக்கு கடும் சுமை


தி.மு.க. அரசின் புதிய வரி விதிப்பால் மக்களுக்கு கடும் சுமை
x

திட்டங்களை செயல்படுத்தாமல் தி.மு.க. அரசின் புதிய வரி விதிப்பால் மக்களுக்கு கடும் சுமை ஏற்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

திருப்பூர்

திட்டங்களை செயல்படுத்தாமல் தி.மு.க. அரசின் புதிய வரி விதிப்பால் மக்களுக்கு கடும் சுமை ஏற்பட்டுள்ளது என்று பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.

ஆர்ப்பாட்டம்

மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, சட்டம், ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

எந்த வரியும் புதிதாக போட மாட்டோம் என்று சொல்லி வீட்டுவரி, சொத்துவரி, தண்ணீர் வரி, மின்கட்டணம் பன்மடங்கு உயர்வு போன்றவற்றை தி.மு.க. அரசு பொறுப்பேற்றதில் இருந்து அறிவித்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தாமல், புதிதாக வரியை போட்டு ஏழை, எளிய மக்கள் தலையில் சுமையை ஏற்படுத்தியுள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

திருப்பூருக்கு புதிய திட்டங்களை கொண்டு வந்த அரசு அ.தி.மு.க. அரசு. 4-வது குடிநீர் திட்டம், ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை கொண்டு வந்தோம். ஆனால் அந்த திட்டங்களை விரைவில் முடிக்காமல் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து வருகிறது. அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தற்போது தி.மு.க. அரசு திறந்து வைக்கிறது.

பஞ்சு, நூல் விலை உயர்வால் பனியன் தொழில் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூருக்கு தோஷம் வந்துவிடுகிறது. மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. மீண்டும் பனியன் நிறுவனங்களை மூடும் நிலை வரும். அதை கண்டித்து இந்த போராட்டம் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

எம்.எல்.ஏ.க்கள்

ஆர்ப்பாட்டத்தில் விஜயகுமார் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. சிவசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், பழனிசாமி, என்.எஸ்.என்.நடராஜ், அம்மா பேரவை மாநில இணை செயலாளர் முத்து வெங்கடேசன், மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர், துணை செயலாளர் பூலுவப்பட்டி பாலு, பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், கருணாகரன், ஹரிகரசுதன், பி.கே.எம்.முத்து, சுப்பிரமணியம், பட்டுலிங்கம், கே.பி.ஜி.மகேஷ்ராம், அம்மா பேரவை மாவட்ட தலைவர் அட்லஸ் லோகநாதன், இணை செயலாளர் உஷா ரவிக்குமார், துணை செயலாளர் ஆண்டவர் பழனிசாமி, வர்த்தக அணி செயலாளர் எஸ்பிஎன் பழனிசாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், வக்கீல் பிரிவு செயலாளர் முருகேசன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், வெள்ளகோவில் ஒன்றிய தலைவர் வெங்கடேச சுதர்சன், அ.தி.மு.க. அம்மா பேரவை மாநில இணை செயலாளர் கே.ஜி.முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் நீதிராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி பொருளாளர் தண்ணீர்பந்தல் தனபால், ஆண்டிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஆண்டிபாளையம் ஆர்.ஆனந்தன் மற்றும் காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை பகுதி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர்.Related Tags :
Next Story